குழந்தைகளை கையில் ஏந்தியவாறு ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இரு பெண்களையும் அவற்றை கொள்வனவு செய்ய சென்ற மூன்று நபர்களும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மொரட்டுவை , எகொடஉயன பிரதேசத்தைச் சேர்ந்த 35 மற்றும் 24 வயதுடைய இரு பெண்களும் அம்பலாங்கொடை, பலப்பிட்டிய ஆகிய பிரதேசங்களை சேர்ந்த மூன்று நபர்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரட்டுவை , எகொடஉயன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.