புத்தளம் பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற பிறந்தநாள் விழாவில் இரு சகோதரர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலின்போது அதனைத் தடுப்பதற்கு முயன்ற இரு பிள்ளைகளின் தந்தை பலத்த கத்திக்குத்து காயங்களுக்குள்ளாகி புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று (18) உயிரிழந்துள்ளதாக புத்தளம் தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புத்தளம் வேப்பமடுவ பிரதேசத்தில் வசித்து வந்த 32 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான அமித் மதுரங்க என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குழந்தையின் பிறந்தநாள் விழாவின்போதே இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.