அரவக்குறிச்சி அருகே முன்னால் சென்ற லாரி மீது கார் மோதியதில் படுகாயமடைந்த 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து குறித்து அரவக்குறிச்சி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் மின்னாம்பள்ளியைச் சேர்ந்தவர் முருகேசன் ( 42 ). ஏழூரை சேர்ந்தவர் சரவணன் ( 45 ). இவர்கள் இருவரும் திருச்செந்தூர் செல்வதற்காக காரில் நேற்றிவு புறப்பட்டுள்ளனர். காரை சரவணன் ஓட்டியுள்ளார். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே கணவாய் ஜக்கம்மாள் கோயில் அருகே நேற்றிரவு கார் சென்றபோது முன்னால் சென்று கொண்டிருந்த ஓடு ஏற்றிச் சென்ற லாரியின் பின் பகுதியில் கார் மோதியுள்ளது.
இதில் படுகாயமடைந்த முருகேசன், சரவணன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.