Home Accident news கோர விபத்து-4 வயது சிறுவன் பலி..!

கோர விபத்து-4 வயது சிறுவன் பலி..!

புத்தளம் – கற்பிட்டி – நுரைச்சோலை, பூலாச்சேனை பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் சிறுவன் ஒருவர் நேற்று மாலை உயிரிழந்துள்ளார்.

பூலாச்சேனை பகுதியைச் சேர்ந்த முஹம்மது சஹீர் சகி முஹம்மது எனும் 4 வயது சிறுவனே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக நுரைச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த குறித்த சிறுவன் பயணித்த துவிச்சக்கர வண்டி ஒன்றும் டிமோ பட்டா வகையைச் சேர்ந்த லொறி ஒன்றும் மோதி இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வீட்டுக்கு முன்பாக தனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த குறித்த சிறுவன், தனது சிறிய துவிச்சக்கர வண்டியை எடுத்துக் கொண்டு வீதிக்கு வந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த சிறுவனை அங்கிருந்தவர்கள் உடனடியாக புத்தளம் தள வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும், அந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
கோர விபத்து-4 வயது சிறுவன் பலி..!-oneindia news