Home ராசி பலன்கள் சங்கடம் போக்கும் சனியில் உங்கள் ராசிபலன் எப்படி..! {17.2.2024}

சங்கடம் போக்கும் சனியில் உங்கள் ராசிபலன் எப்படி..! {17.2.2024}

மேஷம்
aries-mesham
சிறுசிறு பிரச்சனைகள் உங்களை கஷ்டத்துக்கு உள்ளாக்கலாம். எதிர்பார்த்த இனங்களில் இருந்து பணவரவு இல்லாமல் எரிச்சல் உண்டாகும். எடுத்த காரியங்கள் வெற்றி பெற இடைவிடாத உழைப்புத் தேவை.
ரிஷபம்
taurus-rishibum
சம்பாத்தியம் அதிகரிப்பதால், பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் முன்னேற்றமும், பணியில் இருப்பவர்களுக்குப் பதவிவுயர்வும் கிடைக்கும்.
மிதுனம்
gemini-mithunum
தேவையற்ற பயணங்கள் ஏற்படலாம். மங்கையரால் ஏற்படும் மாறாத செலவுகளால் பணமுடை ஏற்பட்டுக் கடன் பெறும் சூழ்நிலை உருவாகலாம். கோபத்தால் காரியங்கள் கெடும்.
கன்னி
virgo-kanni
பல பயணங்கள் ஏற்படலாம். அதில் ஒன்று புண்ணியப் பயணமாகி சுகானுபவங்கள் ஏற்படும். மாணவர்களுக்குக் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். வாழ்க்கையில் இனிய மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.
மகரம்
capricorn-magaram
உங்கள் பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள். வண்டி வாகனங்களில் செல்லும் போது மிகவும் எச்சரிக்கையுடன் செல்லவும். எல்லாவிதத்திலும் செலவுகள் கூடும். நிதானமாகச் செயல்படுங்கள்.
கடகம்
cancer-kadagam
பெரிய மனிதர்களின் நட்பால் பேருதவிகள் கிடைக்கும். திருமணம் ஆகாதவர்களுக்குக் கவலை வேண்டாம். சீக்கிரமே கால்கட்டு விழும். வெளிநாட்டு வாய்ப்புக்கள் கிடைக்கும்.
சிம்மம்
leo-simmam
வாக்கு வன்மையாலும் சாதுர்யத்தாலும், எடுத்த காரியங்கள் அனைத்திலும். வெற்றி அடைவதோடு, அனைவரையும் கவர்வீர்கள். புதிய உத்தியோக வாய்ப்புகள், பதவி உயர்வு ஆகியவற்றை எதிர்பார்க்கலாம்.
துலாம்
libra-thulam
சாதகமற்ற சூழ்நிலை நிலவுவதால், வழக்குகளை ஒத்திப் போடுவது நல்லது. அதிகாரிகளின் ஆணைகளை மதித்து நடந்தால் முன்னேற்றம் ஏற்படும். மனதில் எண்ணியபடி எண்ணிய காரியங்கள் ஏற்றம் தரும்.
மீனம்
pisces-meenam
நல்ல உடை உடுத்தி, நாகரீகமாக, மிடுக்காக மற்றவர்களைக் கவரும் வண்ணம் நடந்துகொள்வீர்கள். உங்கள் தேஜஸ் கூடும். தேவைக்கு அதிகமாகவே தனவரவு உண்டாகும்.
தனுசு
sagittarius-thanusu
எல்லா வளமும் பெறும் இனிய நாள். இனிய சுற்றுலாப் பயணங்களால் இன்பம் பெருகும். பெண்ணின் சிநேகமும், தனக்கெனத் தனிவீடும் அமையும். குடும்பத்தில் சுபகாரியக் கொண்டாட்டங்கள் நிறைவேறும்.
விருச்சிகம்
scorpio-viruchagam
மனையாளின் ஒத்துழைப்பு மட்டற்ற மகிழ்ச்சி தரும். தனவரவு கூடும். புதிய முகநூல் நண்பர்கள் சேர்க்கையால், புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வீர்கள். எண்ணிய எண்ணியாங்கு நடக்கும்.
கும்பம்
aquarius-kumbam
எடுக்கும் காரியங்கள் அனைத்தையும் ஏனோ தானோ என முடிக்கும் சூழ்நிலை உருவாகும். இயலாமை காரணமாக இல்லத்தில் உள்ளவர்கள் மீது ஏற்படும் எரிச்சலைக் குறைத்தால், இரத்த அழுத்தம் எகிராது.