யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமானாறு சந்நிதியான் ஆச்சிரமத்தின் சைவ கலை பண்பாட்டு பேரவையின் மாதாந்த இதழான ஞானச்சுடர் 314 ஆவது இதழ் இன்று வெள்ளிக்கிழமை 01/03/2024 வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.
சந்தியான் ஆச்சிரமம் முதல்வர் கலாநிதி மோகன் சுவாமிகள் தலைமையில் திருமுறை ஓதுதலுடன் நகழ்வுகள் ஆரம்பமானது.
இதில் வெளியீட்டு உரையினை
யாழ்ப்பாண கல்லூரி ஆசிரியர் துரை கணேசமூர்த்தி நிகழ்த்தினார்.
அதனைத் தொடர்ந்து சிறப்பு பிரதிகள் பெறுவதற்க்கு என அழைக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு பிரதிகள் வழங்கிவைக்கப்பட்டன.
அத்துடன் நீண்ட தூரம் சைக்கிளில் சென்று கல்விகற்றுவரும் 5 மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகளும் வழங்கப்பட்டதுடன், யாழ்ப்பாணம் வடமராட்சி ஊடக இல்லத்திற்கு மடிக்கணினி ஒன்றும் வழங்கிவைக்கப்பட்டது.
அதேவேளை ஞானச்சுடர் வாசகர்களுக்காக நடத்தப்பட்ட போட்டியில் வெற்றி பெற்ற முதல் மூன்று வெற்றியாளர் உட்பட. 10 பேருக்கு ஆறுதல் பரிசுகளும். வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இதில் சன்னிதியான் ஆச்சிரியம சைவ கலை பண்பாட்டு பேரவை நிர்வாகிகள். சன்னதியான ஆச்சிரம நிர்வாகிகள், ஊழியர்கள். பக்தர்கள் நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.