சர்வதேச அரசியல் ஆய்வாளர் அலன் கீனன் அவர்களுக்கும், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினருக்கும் இடையில் இன்றையதினம் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது.
முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனுக்கும், சர்வதேச அரசியல் ஆய்வாளர் அலன் கீனனுக்கும் இடையில் முல்லைத்தீவு கள்ளப்பாட்டில் அமைந்துள்ள ரவிகரனின் மக்கள் தொடர்பகத்தில் இன்றையதினம் (17.03.2024) கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது.
குறித்த கலந்துரையாடலில் முல்லைத்தீவு மாவட்ட மக்களின் நிலை , சமகால அரசியல் நிலைப்பாடுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.