மேஷம்
aries-mesham
எதிலும் நியாயத்தோடு நடக்க முயன்றால் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். மனைவியின் வாய் துடுக்கு மற்றவர்கள் பகையை ஏற்படுத்தும். பணிவாக நடந்து அதிகாரிகளிடம் பயன் பல பெறுங்கள்.
ரிஷபம்
taurus-rishibum
பணவரவு மூலம் மனம் பரவசப்படும் ஆடை ஆபரணங்கள், அலங்காரப் பொருட்கள் சேரும். அரசாங்க ஆதரவு மற்றும் உதவிகள் தடையின்றி கிடைக்கும். வியாபாரிகளுக்கு முன்னேற்றமான காலம்.
மிதுனம்
gemini-mithunum
பலவழிகளிலும் எதிர்பார்த்தபடி தனவரவு வந்து சேரும். எதிர்ப்புகள் குறையும். நண்பர்கள் உதவி நன்மை பயக்கும். அரசு உதவியால் தொழில் சிறக்கும். விரும்புவது எதுவாயினும் விரைந்து கிட்டும்.
கன்னி
virgo-kanni
புதிய நற்செய்திகளால் உற்சாகம் பிறக்கும். தனவரவு கூடும். மனைவியின் ஒத்துழைப்பு மன மகிழ்ச்சி தரும். முகநூல் மூலம் நட்பு வட்டம் விரிவடையும்.
மகரம்
capricorn-magaram
தனவரவு தாராளமாக இருக்கும். புதிய ஏற்பாடுகளால் வியாபாரம் விருத்தியாகும். பொருளாதார நிலை முன்பைவிட மேம்படும். புத்தி சாதுர்யத்தால் தொழில் நிலை முன்னேற்றம் காணும்.
கடகம்
cancer-kadagam
வெளியூர் பயணங்களில் கவனம் தேவை. குழந்தைகளுக்கு மருத்துவ கவனிப்பு தேவைப்படும். கவனமாகப் படித்தால் கல்வியில் வெற்றிகளைக் குவிக்கலாம்.
சிம்மம்
leo-simmam
தாயைப் பற்றிய கவலை மனதில் எழும். அவரின் ஆரோக்கியத்தில் தனிக் கவனம் தேவை. எதிலும் தன்னம்பிக்கை இழக்காதீர்கள். முயற்சி திருவினை யாக்கும். துணிந்து செயல்பட்டு வெற்றி அடையுங்கள்.
துலாம்
libra-thulam
வியாபாரத்தில் புதிய முதலீடுகளை தவிர்க்கவும். சுகம் குறைந்து சோகம் விளையும். எதையும் சாதிக்கும் திறமை பெறுவீர்கள். குடும்பத்தினரிடையே வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.
மீனம்
pisces-meenam
தொழில் சம்பந்தமான பெரியவர்கள் சந்திப்பு பயன் தரும். எண்ணியபடி எண்ணிய காரியங்கள் ஏற்றம் தரும். பெண்களால் நன்மை உண்டாகும். ஸ்த்ரீ போக விருத்தி உண்டு.
தனுசு
sagittarius-thanusu
தொழில் புரிவோருக்கு வீண் செலவுகள், பணமுடையும் தவிர்க்க முடியாததாகும். உண்ணவும் நேரமின்றி உழைப்பு அதிகமாகும். சினத்தைக் குறைத்தால் சிக்கல்கள் தீரும்
விருச்சிகம்
scorpio-viruchagam
போதுமான அளவு தனவரவு இருக்கும். எண்ணிய காரியங்கள் எல்லாம் மாற்றமின்றி, எண்ணியது போலவே நடக்கும். வியாபாரிகள் புத்தி சாதுர்யத்தால் பொருளாதார நிலை மேம்படும்.
கும்பம்
aquarius-kumbam
புதிய அரசு வேலைவாய்ப்புகள், பதவிவுயர்வு ஆகியவற்றை எதிர்பார்க்கலாம். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். வாழ்க்கையில் இனிய மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.