Home Uncategorized சாந்தனின் இலங்கை வருகை – ஜனாதிபதி இணக்கம்.!

சாந்தனின் இலங்கை வருகை – ஜனாதிபதி இணக்கம்.!

முன்னாள் இந்தியப் பிரதமர் ரஜீவ்காந்தி கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு விடுதலையானவர்களுள் ஒருவரான சாந்தனை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு சம்மதம் தெரிவித்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேவையான ஏற்பாடுகளை செய்வதற்கும் இணக்கம் தெரிவித்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த விடயம் தொடர்பாக இன்று (05) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது ஜனாதிபதி மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோருடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரஸ்தாபித்த நிலையிலேயே ஜனாதிபதியினால் சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளது.