Home இலங்கை செய்திகள் சிறுவர்கள் துஸ்பிரயோகம் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்..!

சிறுவர்கள் துஸ்பிரயோகம் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்..!

சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்களின் பதிவுகள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்திருந்தார்.

நாட்டில் அண்மைக்காலங்களில் பதிவான சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் நெருங்கிய உறவினர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் 2022 ஆம் ஆண்டில் 1,618 முறைப்பாடுகளும், 2023 ஆம் ஆண்டில் 1,639 முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

எனவே, உரிய தெளிவுப்படுத்தல்கள் மூலம் சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுக்க முடியும் என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.