Home jaffna news சுதந்திரதின எதிர்ப்புப் போராட்டம் – யாழிலும் முன்னெடுப்பு.!!

சுதந்திரதின எதிர்ப்புப் போராட்டம் – யாழிலும் முன்னெடுப்பு.!!

இலங்கையின் சுதந்திரதினம் தமிழர்களின் கரிநாள் என குறிப்பிட்டு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் இன்று, யாழ்ப்பாபத்தில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாண பிரதேச செயலகத்திற்கு அருகில் ஆரம்பமான போராட்டம், பதாகைகளைத் தாங்கிய ஊர்வலமாக யாழ்ப்பாண மாவட்டச் செயலக முன்றலை வந்தடைந்தது.

இதன்போது சிறிலங்காவின் சுதந்திரநாள் தமிழர்களுக்கு கரிநாள், அடக்குமுறைக்கு உள்ளாக்கும் சட்ட மூலங்களை நீக்கு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தவாறு கருப்புப் பட்டியணிந்து, கைகளிலே பதாதைகளைத் தாங்கியவாறு கோஷங்களும் எழுப்பப்பட்டன.
சுதந்திரதின எதிர்ப்புப் போராட்டம் - யாழிலும் முன்னெடுப்பு.!!-oneindia news

சுதந்திரதின எதிர்ப்புப் போராட்டம் - யாழிலும் முன்னெடுப்பு.!!-oneindia news


தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள், அமைப்பாளர்கள், மாநகர சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட ஆதரவாளர்கள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.