லூர்து அன்னைக்கு திருவிழா திருப்பலி இலங்கையின் பல்வேறு ஆலயங்களில் முன்னெடுக்கப்பட்டது.
இந்நிலையில் வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று புனித பிலிப்புநேரியார் ஆலய வளாகத்தில் அமைந்துள்ள லூர்து கெபியில் புனித லூர்து அன்னைக்கு திருவிழா திருப்பலி இன்று முன்னெடுக்கப்பட்டது.
செம்பியன்பற்று பங்குத்தந்தை அருட்தந்தை டியூக் வின்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் இயக்கச்சி பிரதேசத்தில் அமைந்துள்ள அமலமரித் தியாகிகள் சபையின் நேசக்கரம் நிறுவன இயக்குனர் அருட்தந்தை சுரேன் அவர்கள் தலைமைதாங்கி திருவிழா திருப்பலியை ஒப்புக்கொடுத்தார்