சைவ வித்தியா விருத்திச் சங்கத்தின் நூற்றாண்டு விழா நிகழ்வுகள் தற்போது யாழ்ப்பாணம்- நல்லூர் துர்க்காதேவி மணிமண்டபத்தில் இடம்பெற்று வருகின்றது.
காலை 9 மணி தொடக்கம் 12:45 மணி வரை முதலாவது அமர்வும், மதியம் 2:30 மணி தொடக்கம் 4:50 மணிவரை இரண்டாவது அமர்வாகவும் இந்த நிகழ்வு இடம்பெற்று வருகின்றது.
நிகழ்வில் கடவுள் வாழ்த்து, மங்கல இசை, நடனம், விலுப்பாட்டு உள்ளிட்ட பல கலை நிகழ்வுகளும் இடம்பெற்று வருகின்றது.
நூற்றாண்டு விழாவில் ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான தலைவர் கலாநிதி ஆறு.திருமுருகன், சிவகுரு ஆதீன குருமுதல்வர் தவத்திரு வேலன் சுவாமிகள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.