டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்கும் வழிமுறைகள்…! Prevention of Dengue fever
டெங்கு காய்ச்சல் நோயாளிடம் இருந்து கொசு மூலம் பரவும் சுழற்சியை தடுக்க வேண்டும். அதனால், நோயாளிகள், கொசுவலைக்குள் சுகம் ஆகும் வரை வைக்க வேண்டும்.
டெங்கு வைரஸை பரப்பும் கொசுவான aedes கொசுவை ஒழிக்க அல்லது கட்டுபடுத்த வேண்டும். பழைய டயர், தூக்கி வீசி எறியப்பட்ட பூச்சாடி, பிளாஸ்டிக் பைகள், கேன்களில் தண்ணீர் சேராதவறு பார்க்கவேண்டும். தேவையற்ற அதுபோன்ற பொருள்களை அகற்றி விடவேண்டும்.
வீட்டில் உபயோகபடுத்தாத கழிவறைகளில், கொசு இனவிருத்தி செய்யும் வாய்ப்பு உண்டு. அந்த மாதிரி கழிப்பிடங்களை, அடிக்கடி சுத்தம் செய்து, கழி பீங்கான்களை மூடி வைக்கவேண்டும்.
தண்ணீர் கஷ்ட காலங்களில், தண்ணீரை பாத்திரங்களில் மூடி வைக்கும் நிலை ஏற்பட்டால், இரண்டு நாளுக்கு மேல் பார்த்து கொள்ளவேண்டும். அதை நன்றாக மூடி, கொசு அண்டவிடாமல் பார்த்து கொள்ளவேண்டும்.
பொதுவாக இந்த கொசுவின் வாழ்கை சுழற்சி ஏழு நாள் ஆதலால், எந்த தேங்கும் சுத்தமான நீரும் ஏழு நாளை தாண்டினால், அது கொசு இனபெருக்கம் செய்து தனது வழக்கை சுழற்சியை முடித்து பரவ எதுவாக அமைந்து விடும்.
நீர் தேக்க தொட்டிகளை மூடி வைக்க வேண்டும். வீட்டில் ஏசி, குளிர்சாதனப்பெட்டி மூலம் வெளியாகும் தண்ணீர் தேங்கமல் அவ்வபோது நீக்கி விடவேண்டும்.
கொசு கடிக்காமல், கை கால் களைநன்றாக மூடி வைக்க வேண்டும். கொசுவலைகளை பயன்படுத்தலாம். வீட்டு கதவு ஜன்னல்களுக்கு கொசு வலை அடித்து கொசு அண்டாமல் பார்த்து கொள்ளலாம். கொசுவை விரட்டும் புகைகள் உபயோகபடுத்தலாம்.. ஆனால் சிலருக்கு இது சுவாச அலர்ஜி ஏற்படுத்தலாம்.
உடலில் தேய்க்கும் கொசு ஒழிப்பான் மருந்தான deet உபயோகபடுத்தலாம். அனால் இது தோல் அலர்ஜி உண்டு பண்ணலாம்.
இந்த கொசு பகல் நேரத்தில் அதிகம் குறிப்பாக சூரியன் உதிக்கும் மற்றும் மறையும் நேரத்தில் அதிகம் கடிக்கும் .
அரசு மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்தின் மூலம், கொசு விரட்டும் புகை மற்றும் மருந்து தெளிப்பது மூலம் கொசுவை ஒழிக்கலாம்
நீர் சேர்ந்து இருக்கும் இடங்களில், கொசுவின் லாவா வை ஒழிக்கும் மருந்துகளை அடிப்பதன் மூலம், கொசுவின் வாழ்க்கை சுழற்சி லாவாவிலே நிறுத்தப்பட்டு, முழு வளர்ச்சி அடைந்த கொசுவாக மாறாமல் தடுக்கலாம்.
டெங்கு வராமல் தடுக்க கொசுவை ஒழிப்பதன் மூலமும், கொசு கடிக்காமல் பார்த்துக் கொள்வதன் மூலமே இதை தடுக்க ஒழிக்க முடியும்.
டெங்கு காய்ச்சல் நோயை பரப்பக்கூடிய நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களைப் பார்ப்போமானால்:
எமது வீட்டுக் கூரையிலுள்ள பிளாஸ்டிக் மற்றும் சீமெந்திலான நீர்த்தாங்கிகள் (TANK) மற்றும் நீரை சேகரித்து வைக்கக்கூடிய பொருட்கள். இவை அனைத்தையும் நுளம்பு புகாதவாறு நெட்டினால் மூடி வைக்க வேண்டும். அவ்வாறு வைக்க முடியாத பட்சத்தில் இவை அனைத்தையும் வாரத்திற்கு ஓரு முறை நன்றாக தேய்த்து கழுவுவதன் மூலம் இந்த நுளம்புகள் பெருகுவதை இல்லாமலாக்கலாம்.
இது தவிர எமது கூரையில் மழை நீர் வடிந்து செல்வதற்காக வைத்துள்ள பீளியில் இலை, குழைகள் சேர்ந்து இருக்கலாம். அல்லது இவை வெயிலுக்கு வளைந்து, நெளிந்து இருப்பதன் மூலம் நீர் தேங்கி நிற்கலாம். இதன் மூலமும் இந்த நுளம்பு பெருகுவதற்கான அபாயம் காணப்படுகின்றுது. எனவே இந்த பீளிகளை வாரத்திற்கு ஒரு முறை துப்புரவாக்குவது அவசியமாகும்.
அத்துடன் வீட்டுக்கு அருகில் பாவித்து விட்டு வீசுகின்ற பாத்திரங்கள், உடைந்த பாத்திரங்கள், பிளாஸ்டிக் கோப்பைகள், பொலித்தின் உறைகள் மற்றும் பேக்குகள் பொலித்தினினால் மூடிவைக்கப்பட்டுள்ளவைகள் போன்றவற்றிலும் நீர் தேங்கி நின்று டெங்கு காய்ச்சல் நுளம்பு பரவுவதற்கான வாய்ப்பு ஏற்படலாம். எனவே இவற்றை சரியான முறையில் நீர் தேங்கி நிற்காதவாறு அகற்ற வேண்டும்.
இது தவிர சிரட்டை, குறும்பை, யோக்கட் கோப்பைகள், தயிர் சட்டிகள், அலங்கார பூச்சாடி அல்லது அதற்கு கீழ் வைக்கப்பட்டுள்ள ட்றே (TRAY) அல்லது பாத்திரங்கள் போன்றவற்றில் பரவலாம். இன்னும் சில பூச்சாடிகளிளே மண் இறுகி இருக்கும். இதில் நீர் தேங்கினாலும் நுளம்பு பரவலாம்.
இத்துடன் வீட்டிலுள்ள குளிர்சாதனப்பெட்டியின் பின் பகுதியில் நீர் தேங்கி இருக்கும் இடம் காணப்படுகின்றுது இதனை ஓரு நெட் போட்டு நுளம்பு போகாதவாறு வைக்கலாம். இந்த பாத்திரத்தையும் வாரத்திற்கு ஒரு முறை பிரஷ் (டிசரளா) ஒன்றினால் தேய்த்து கழுவி நீரை அகற்ற வேண்டும்.
கிணறுகள், குழாய் கிணறுகளிலும் நுளம்பு பெருகக் கூடிய வாய்ப்பு உள்ளது. எமது சுகாதார அதிகாரிகளை அணுகி அவர்களின் ஆலோசனைகளுடன் வீட்டில் உள்ள இவ்வாறான இடங்களுக்கு இரசாயணப் பொருட்களை இடுவதன் மூலமும் இந்த டெங்கு நோய் பரவுவதை தடுக்கலாம்.
அத்துடன் கிணறு, நீர் தடாகம் இவற்றுக்கு கப்பிஸ் எனப்படும் மீன் வகைகளை இடுவதன் மூலமும் நுளம்பு பெருக்கத்தை குறைக்கலாம். இவ்வாறு வீட்டில் வெவ்வேறான இடங்களில் நீர் தேங்கி இருக்கும் இடங்கள் இருக்க முடியும்.
இவற்றை தேடிக் கண்டுபிடித்து அகற்றுவதன் மூலம் எமக்கும் அண்டை வீட்டாருக்கும், எமது ஊரில் உள்ள அடுத்தவர்களுக்கும் இப் பயங்கரமான நோய் பரவுவதில் இருந்து மிகவும் சுலபமான முறையில் பாதுகாக்க முடியும்.
அத்துடன் பழைய டயர்களில் நீர் தேங்கி இருக்குமானால் டெங்கு நுளம்புகளின் பரவல் அதிகமாக ஏற்படும் வாய்ப்புள்ளது. இந்த பழைய டயர்களை நாம் முறையாக அகற்றுவதன் ஊடாக டெங்கு நுளம்புகளின் பெருக்கத்தை குறைக்க முடியும்.
எனவே, நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்து ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து இந்த நீர் தேங்கும் ஆபத்தான இடங்களை அகற்றுவதன் மூலம் வேகமாக அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சல் நோயாளிகளின் எண்ணிக்கையை குறைக்க முடியும்.
எனவே சமூக ஆர்வலர்கள், ஆசிரியர்கள், வாலிபர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டத்தில் ஈடுபட்டு இதனை முற்றாக கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபடுமாறு அன்புடன் அனைவரையும் கேட்டுக் கொள்கின்றோம்.