சுரேஷ் பிரேமச்சந்திரன் அவர்கள் இன்றைய தினம்28.02.2024 கிளிநொச்சியில் ஊடக சந்திப்பின்போது கருத்து தெரிவிக்க இவ்வாறு தெரிவித்தார்.
தற்பொழுது நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் சபாநாயகர் மீதுநம்பிக்கை இல்லா பிரேரனையை முன் வைத்துள்ளனர் நிகழ் நிலை காப்பு சட்டம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தின்தெரிவித்த கருத்துக்களில் சிலவற்றை உள்ளடக்கி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இன் நிகழ்நிலைகாப்பு சட்டதினால் சமூக வலைத்தளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி வரும் அனைவருக்குமே பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய வகையில் அமைந்துள்ளது உயர் நீதிமன்றத்தின் வழங்கப்பட்ட கருத்துக்கள் அனைத்தையும் உள்ளடக்காது சபாநாயகர் நாடாளுமன்றத்தில் கையளித்து இருக்கக் கூடாது எனவும் இருப்பினும் அவர் அதற்கான ஒப்புதலை அளித்திருக்கிறார் எனவும் இதன் காரணமாகவே சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்
ஈழ மக்கள் புரட்சிகர முன்னணியின் தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் கிளிநொச்சி கட்சி அலுவலகத்தில் ஊடக சந்திப்பு ஒன்றிணை மேற்கொண்டிருந்தார்.குறித்த ஊடக சந்திப்பில்
எதிர்கட்சிகள் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவருவதற்கு எதிர் கட்சியினரிடம் இருந்து கையெழுத்து சேகரிக்கின்றனர்.
நிகழ்நிலை காப்புச் சட்டம் நிறைவேற்றுவதற்கு முன்பு உயர் நீதிமன்றம் சில விடயங்களை பரிந்துரைத்தது அதில் ஒரு சில திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது. சபாநாயகருக்கு தெரியும் நீதி மன்றத்தின் பரிந்துரைகள் பல உள்வாங்கப்படாமல் சபாநாயகர் கையொப்பம் இட்டார்.
பாராளுமன்றில் இப்பொழுது இயற்றப்டும் சட்டம் நாட்டு மக்களை ஜனநாயக ரீதியில் பாதுகாப்பதற்கு இல்லை ஆளுங்கட்சியை பாதுகாத்து அடக்கு முறையை மேற்கொள்வதற்கு
ஜனாதிபதி தனக்கு சாதகமாக சட்டங்களை ஏற்று கொள்கிறார்.
சர்வதேச நாணய நிதிய வழிகாட்டலின் கீழ் வரி உள்ளிட்டவற்றை அரசு அதிகரித்துள்ளது. சாதாரண மக்களின் வாழ்க்கை செலவு போதாது .பாடசாலை மாணவர்களுக்கு வீட்டில் காலை உணவே கிடைக்காது 6மில்லியன் மக்கள் உணவுக்கு ஏங்கி நிற்கின்றனர்.
ஜனாதிபதி வேட்பாளர்களாக வர இருக்கிறவர்களிடம் எந்த பொருளாதார திட்டமும் இல்லை சஜீத், அனுர என குறிப்பிட்டுள்ளார்.
தமிழரசுக்கட்சியின் தற்போதைய நிலை தொடர்பாகவும் கருத்து தெரிவித்தார்.