தடைகளை வெல்லும் தமிழ்த் தேசியம்” எனும் தொனிப்பொருளில் தமிழ்த் தேசிய எழுச்சி நாள் நிகழ்வுகள் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
யாழ்.கொடிகாமத்தில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் உலக தாய்மொழி தின ஏற்பாட்டுக் குழுவின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றது.
நிகழ்வின் ஆரம்பத்தில் மங்கள விளக்கேற்றல் இடம்பெற்று தொடர்ந்து மாவீரர் ஒருவரின் தாயாரினால் ஈகைச்சுடரும் ஏற்றப்பட்டது.
நிகழ்வில், தென்கயிலை ஆதீன குரு முதல்வர் தவத்திரு அகத்தியர் அடிகளார், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, ஞா.ஸ்ரீநேசன், ஈ.சரவணபவன், சீ.யோகேஸ்வரன், பா.அரியநேத்திரன், க.கோடீஸ்வரன், உள்ளூராட்சி மன்ற முன்னாள் உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டுள்ளர்.