Home jaffna news தாயக மக்களின் கண்ணீர் மழைகளில் நனைந்து இறுதி யாத்திரை செல்கிறார் சாந்தன்..!{படங்கள்}

தாயக மக்களின் கண்ணீர் மழைகளில் நனைந்து இறுதி யாத்திரை செல்கிறார் சாந்தன்..!{படங்கள்}

சாந்தனின் பூதவுடல் மாங்குளம் பிரதேசத்தை சென்றடைந்தது.

 

பெருந்திரளான மக்கள் உணர்வெழுச்சியுடன் அஞ்சலி செலுத்தினர்.

 

இதனைதொடர்ந்து சற்றுமுன்னர் சாந்தனின் பூதவுடல் அடங்கிய ஊர்தி கிளிநொச்சி நோக்கி நகர்கிறது.

 

இந்தியாவில் சுகவீனமுற்ற நிலையில் உயிரிழந்த சாந்தனின் பூதவுடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக இன்று காலை வவுனியா போராளிகள் நலன்புரி சங்கத்திற்கு முன்பாகவும்,பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாகவும் வைக்கப்பட்டது.

 

சாந்தனின் இறுதிக்கிரியை நாளை காலை 10 மணிக்கு அவரது பிறந்த மண்ணான உடுப்பிட்டியில் இடம்பெறவுள்ளது.

 

இந்த இறுதி கிரியையில் உறவினர்கள் ஊர் மக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் அஞ்சலி செலுத்துவதற்கு இடமளிக்குமாறு குடும்பத்தார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

 

இன்றைய தினத்தினை தமிழ் தேசிய துக்கதினமாக அனுஷ்டிக்க பொது அமைப்புக்கள் பகிரங்க வேண்டுகோள் விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தாயக மக்களின் கண்ணீர் மழைகளில் நனைந்து இறுதி யாத்திரை செல்கிறார் சாந்தன்..!{படங்கள்}-oneindia news தாயக மக்களின் கண்ணீர் மழைகளில் நனைந்து இறுதி யாத்திரை செல்கிறார் சாந்தன்..!{படங்கள்}-oneindia news

தாயக மக்களின் கண்ணீர் மழைகளில் நனைந்து இறுதி யாத்திரை செல்கிறார் சாந்தன்..!{படங்கள்}-oneindia news தாயக மக்களின் கண்ணீர் மழைகளில் நனைந்து இறுதி யாத்திரை செல்கிறார் சாந்தன்..!{படங்கள்}-oneindia news