Home இலங்கை செய்திகள் தாய்,மகள் இரட்டை கொலை-இலங்கை நீதிமன்றின் அதிரடி தீர்ப்பு..!

தாய்,மகள் இரட்டை கொலை-இலங்கை நீதிமன்றின் அதிரடி தீர்ப்பு..!

கொட்டகெதன பிரதேசத்தில் தாய் மற்றும் மகளை கொலை செய்த சம்பவம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டிருந்தவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி மேல் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜயரத்ன இந்த தீர்ப்பை இன்று (19) வழங்கினார்.

கொட்டகெதன பிரதேசத்தை சேர்ந்த நீல் லக்ஷ்மன் என்ற குற்றவாளிக்கே மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2012ஆம் ஆண்டு ஜூலை மாதம் 19ஆம் திகதி இந்தக் இரட்டைக் கொலை இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.