Home jaffna news திருமணமாகி 6 மாதம்-யாழில் மற்றுமொரு இளைஞன் தவறான முடிவு..!

திருமணமாகி 6 மாதம்-யாழில் மற்றுமொரு இளைஞன் தவறான முடிவு..!

நேற்றிரவு, தவறான முடிவெடுத்து ஆணொருவர் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். வைத்தியசாலை வீதி மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த சிவாயநம சுயாஸ்கரன் (வயது 31) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவருக்கு ஆறு மாதங்களுக்கு முன்னர் திருமணம் இடம்பெற்ற நிலையில் தற்போது விவாகரத்து வழக்கு நடைபெற்று வருகிறது. இதனால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக இவ்வாறு தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளளார்.

இவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் இன்றையதினம் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.