Home jaffna news தென்னிந்திய திரைப் பிரபலங்கள் இலங்கை வருகை.!

தென்னிந்திய திரைப் பிரபலங்கள் இலங்கை வருகை.!

Northern Uni இன் பிரமாண்ட இசை நிகழ்ச்சியை முன்னிட்டு தென்னிந்திய நடிகை ரம்பா மற்றும் தென்னிந்திய நடன இயக்குனர் கலா மாஸ்டர் ஆகியோர் இன்று(6) யாழ் சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

எதிர்வரும் (9)ஆம் திகதி குறித்த நிகழ்ச்சி யாழ்ப்பாணம் முற்றவெளியில் நடைபெறவுள்ளது.. நடைபெறவிருக்கும் ஹரிகரனின் இசை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காகவே அவர்கள் இருவரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

தென்னிந்திய திரைப் பிரபலங்கள் இலங்கை வருகை.!-oneindia news


NORTHERN UNIஇன் ஏற்பாட்டில் பிரபல தென்னிந்தியப் பாடகர் ஹரிஹரனின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி கடந்த டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி யாழ்ப்பாணம் முற்றவெளி அரங்கில் இடம்பெறவிருந்தது. எனினும் அப்போது நிலவி வந்த சீரற்ற காலநிலை காரணமாக குறித்த நிகழ்வானது பெப்ரவரி மாதத்திற்கு பிற்போடப்பட்டது.

குறித்த இசை நிகழ்ச்சியில், நடன இயக்குனர் சாண்டி, யோகிபாபு, நடிகை தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஸ் ஆகியோரும் கலந்துகொள்ள உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version