Home இலங்கை செய்திகள் தேராவில் குளத்தின் மேலதிக நீரை வெளியேற்ற முதற்கட்டமாக பாலம் அமைக்கும் பணி ஆரம்பம்..!{படங்கள்}

தேராவில் குளத்தின் மேலதிக நீரை வெளியேற்ற முதற்கட்டமாக பாலம் அமைக்கும் பணி ஆரம்பம்..!{படங்கள்}

வழமைக்கு மாறக கிடைக்கப்பெற்ற கனமழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தேராவில் குளம் நிரம்பி காணப்படுவதோடு மேலதிக நீர் வெளியேற முடியாத நிலை காணப்படுவதால் குளத்தினை அண்மித்த பகுதியில் உள்ள மக்களின் வீடுகள் கடந்த டிசம்பர் மாதம் 18 ம் திகதி முதல் சுமார் இரண்டு மாதங்களாக  குளத்து நீரில் நிரம்பி காணப்படுகின்றது இந்நிலையில் குறித்த பகுதியில் வசித்த குடும்பங்கள் மூங்கிலாறு பொதுநோக்கு மண்டபத்தில் உள்ள இடைத்தங்கல் முகாமில் தங்கியுள்ளனர்

மக்களின் தொடர்ச்சியான கோரிக்கையில் இந்த நீரினை வெளியேற்றுவதற்கான நடவடிக்கையில் மாவட்ட அரசாங்க அதிபர்,பிரதேச செயலாளர் உள்ளிட்டவர்கள் பல்வேறு தரப்பினருடன் பல்வேறு  சந்திப்புக்களை மேற்கொண்டு வருகின்றனர்

இந்நிலையில் தற்போது அதற்கான நிதி உதவியினை வழங்கி  நீரினை வெளியேற்றும் நடவடிக்கைக்கு லைக்கா ஞானம் பவுண்டேசன் முன்வந்துள்ளது இதன் முதற் கட்டமாக லைக்கா ஞானம் பவுண்டேசன் நிறுவனத்தின் உப தலைவர் முன்னாள் அரசாங்க அதிபர் சு.அருமைநாயகம் உள்ளிட்ட லைக்கா ஞானம் பவுண்டேசன் குழுவினர் வருகை தந்து குறித்த பகுதியை பார்வையிட்டிருந்தனர்

குளத்தின் நீரினை வெளியேற்றுவதற்காக 18 மில்லியன் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது இதில் 5.5 மில்லியன் வரையிலான நிதியில் பாலத்தினை வீதி அபிவிருத்தி அதிகாரசபை மேற்கொள்ளவுள்ளதுடன் ஏனைய நடவடிக்கையினை முன்னெடுக்க லைக்கா ஞானம் பவுண்டேசன் முன்வந்துள்ளது

இந்த நிலையில் குளத்து நீரினை தேக்கங்காட்டு பகுதி ஊடாக வெளியேற்றுவதற்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான ஏ 35 வீதியில் பாலத்தினை அமைப்பதற்கான முதற்பட்ட பணிகள் நேற்றுமுன்தினம் (20) ஆரம்பிக்கப்பட்டுள்ளது

வீதி அபிவிருத்தி அதிகாரசபை குறித்த வீதியில் பாலம் அமைப்பதற்கான வீதியினை தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள் இதற்காக குறித்த பகுதியில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் ஊழியர்கள் பணிகளில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

முல்லைத்தீவு பரந்தன் வீதியில் தேராவில் தேக்கங்காட்டு வளைவு வீதியில் வீதி வேலை இடம்பெற்று வருவதால் சாரதிகள் வாகனத்தின் வேகத்தினை குறைத்து பயணிப்பதன் ஊடாக விபத்துக்களை தவிர்த்துக்கொள்ளலாம்

இதேவேளை மிகுதி வாய்க்கால் அமைக்கும் பணிகளும் லைக்கா ஞானம் பவுண்டேசன் நிறுவனத்தின் 13 மில்லியன் ரூபா செலவில் இந்தவாரம் ஆரம்பிக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது

குறித்த பாலம் அமைக்கும் பணி மற்றும் வாய்க்கால் பணி என்பன நிறைவடைந்ததும் குறித்த குளத்தின் மேலதிக நீர் கடத்தப்பட்டு குளத்தில் போதுமான நீர் சேகரிக்கப்படும் பட்சத்தில் குளத்தைச் சூழ உள்ள வெள்ளத்தில் மூழ்கியுள்ள வீடுகளில் இருந்து வெள்ளம் வடிந்த  பின்னர் குறித்த மக்கள் வீடுகளுக்கு செல்ல முடியுமான நிலை ஏற்படுவதோடு  மக்களுக்கான தேவைகளுக்கான நீரும்  குறித்த குளத்தில் சேகரிக்கப்படும்

இந்த விடயத்தில் குளத்து நீரை வெளியேற்றுவதன் ஊடாக குளத்தில் நீர் சேகரிக்கப்படாது குளத்தில் நீரில்லாமல் போய்விடும் என்ற குழப்பநிலையை ஏனைய மக்கள் மத்தியில் விதைக்கப்பட்டு வருகின்ற நிலைமையில் அவ்வாறான ஒரு செயற்பாடு இடம்பெறாது  எனவும் மேலதிக நீர் மாத்திரமே வெளியேற்றப்படும் எனவும் குறித்த குளத்தின் உரிய கொள்ளளவுக்கான  நீர் சேகரிக்கப்படும் எனவும்   எனவே மக்கள் வீண் அச்சம் கொள்ள தேவையில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது

இரண்டு மாதங்களுக்கு மேலாக வீடுகளில் வெள்ள நீர் தேங்கி நின்று குறித்த வீடுகளில் உள்ள மக்களினுடைய பயன் தரும் மரங்கள் பல அழிவடைந்துள்ள நிலையில்  வீடுகளின் பொருட்கள் பலவும் வெள்ள நீர் தேங்கி  நின்றதால் பாரிய சேதத்துக்குள்ளாகி மக்கள் பாரிய இன்னல்களுக்கு முகம் கொடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தேராவில் குளத்தின் மேலதிக நீரை வெளியேற்ற முதற்கட்டமாக பாலம் அமைக்கும் பணி ஆரம்பம்..!{படங்கள்}-oneindia news தேராவில் குளத்தின் மேலதிக நீரை வெளியேற்ற முதற்கட்டமாக பாலம் அமைக்கும் பணி ஆரம்பம்..!{படங்கள்}-oneindia news

தேராவில் குளத்தின் மேலதிக நீரை வெளியேற்ற முதற்கட்டமாக பாலம் அமைக்கும் பணி ஆரம்பம்..!{படங்கள்}-oneindia news