சாந்தனின் உயிரிழப்பிற்கு நீதிகோரி யாழ்.இந்திய துணைத்தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்தியாவில் உடல் நலக் குறைவால் உயிரிழந்த சாந்தனின் பூதவுடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக இன்று யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் மலர்சாலையில் வைக்கப்படவுள்ளது.
அதனையடுத்து பூதவுடல் நாளை உடுப்பிட்டியிலுள்ள அவரது இல்லத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.
அதன் பின்னர், தகனக் கிரியைகளை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்திய – திராவிட கூட்டுச் சதியால் பலியெடுக்கப்பட்ட சாந்தனுக்கு நீதி கோரி யாழிலுள்ள இந்திய தூதரகத்தை முற்றுகையிட்டு “இந்தியத் துரோகத்தை வேரறுக்க தமிழர்களாய் ஒன்றிணைவோம்” எனும் தொனியில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.