நீர்கொழும்பு – காமச்சோதயா சந்தையில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில், அவர் 60 முதல் 70 வயதுக்கு இடைப்பட்ட, சுமார் 05 அடி 06 அங்குல உயரம், ஒல்லியான சாதாரண உடலமைப்பு கொண்டவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்