Home Uncategorized பச்சை கள்ளியை தலைவர் மகளுடன் ஒப்பிடும் அலுக்கோசுகள் – lanka info

பச்சை கள்ளியை தலைவர் மகளுடன் ஒப்பிடும் அலுக்கோசுகள் – lanka info

யார் அந்த உதயகலா ? பிரபாகரன் மகள் துவாரகா என பித்தலாட்டம்!

தமிழீழம் கோரி இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போரில் விடுதலை புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் கடந்த 2009-ம் ஆண்டு அந்நாட்டு ராணுவத்தால் கொல்லப்பட்டார் என இலங்கை இராணுவம் அறிவித்திருந்தது

இந்த போரில் பிரபாகரனின் மனைவி மதிவதனி, 2 மகன்கள், மகள் துவாரகா ஆகியோரும் உயிரிழந்து விட்டனர் என்று இலங்கை ராணுவம் அறிவித்தது.

ஆனால் டென்மார்க் நாட்டில் வசிக்கும் தாரகா ஹரித்தரன் என்ற பெண், தன்னை பிரபாகரனின் மனைவி மதிவதனியின் சகோதரி என்று கூறி ‘வீடியோ’ ஒன்றை வெளியிட்டார்.

அதில் மதிவதனியும், பிரபாகரனின் மகள் துவாரகாவும் இறக்கவில்லை. உயிரோடுதான் இருக்கிறார்கள் என்று பரபரப்பு தகவலை வெளியிட்டார்.

பச்சை கள்ளியை தலைவர் மகளுடன் ஒப்பிடும் அலுக்கோசுகள் - lanka news - Dinamani news - துவாரகா,  உதயகலா

பிரபாகரனும் உயிருடன் இருக்கிறார்’ என்று உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் தொடர்ந்து கூறி வருகிறார். இந்த தகவலை இலங்கை நாட்டு ராணுவம் திட்டவட்டமாக மறுத்து உள்ளது.

இந்த நிலையில் இலங்கையில் உள்ள சமூக வலைத்தளங்களில் ‘வீடியோ’ காட்சி ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதில், அந்த நாட்டில் சர்வ மக்கள் கட்சியை நடத்தி வரும் உதயகலா என்ற பெண்தான் பிரபாகரனின் மகள் துவாரகா என்று வர்ணிக்கப்பட்டுள்ளது.

துவாரகா தனது பெயரை உதயகலா என்று மாற்றி தமிழ்நாட்டில் அடைக்கலம் புகுந்ததாகவும், தற்போது அவர் மீண்டும் இலங்கைக்கு திரும்பி மக்கள் சேவையில் ஈடுபட்டு வருவதாகவும் மோட்டு தனமாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

யார் அந்த உதயகலா ? பிரபாகரன் மகள் துவாரகா என பித்தலாட்டம்!

‘விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்; அவரது மகள் துவாரகாவும் உயிருடன் இருக்கிறார். துவாரகாவின் அம்மாவை சந்தித்துப் பேசியதில் இருந்து, அறிந்து கொண்டவை’ என, அதிரடியாக செய்திகளை கிளப்பி விடுவதும், அது தொடர்பாக சமூக ஊடகங்களில் கருத்துக்கள் பதிவிடுவதும், சமீக கால வாடிக்கையாக உள்ளது.

இதற்கிடையில், விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீள் உருவாக்கம் செய்யப் போவதாக கூறி, உலகம் முழுதும் உள்ள ஈழத் தமிழ் ஆதரவாளர்களிடம் வசூலும் நடக்கிறது.

இந்நிலையில், ‘இலங்கையில் சர்வ மக்கள் கட்சி துவங்கி இருக்கிறேன். அதன் தலைவராக இருக்கும் நான், பிரபாகரன் கண்ட கனவை நிறைவேற்ற, சபதம் எடுத்திருக்கிறேன்’ என, உதயகலா என்ற பெண் வெளியிட்டுள்ள வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.அந்த வீடியோவில், இந்த பெண் தோன்றும் காட்சிகளில், பின்னணியில் இருப்போர், ‘துவாரகா… துவாரகா…’ என அவரை அழைக்கும் குரல் ஒலிக்கிறது.
யார் அவர்?

இலங்கை பத்திரிகையாளர்கள் மற்றும் உளவுத் துறை அதிகாரிகள் முன்னாள் போராளிகள் கூறியதாவது:

உதயகலா, இலங்கையின் சாகவச்சேரி நுணாவிலையைச் சேர்ந்தவர். முல்லைத் தீவுக்கு சென்று, அங்கிருந்து வவுனியாவுக்கு வந்தவர். அவரது கணவர் தயாபரராஜ், யாழ்ப்பாணம் காலடி நகர் வாரிவளைவை சேர்ந்தவர். பெர்தானியா பல்கலையில் பொறியியல் பட்டம் பெற்றவர்.

அவர், படிப்பை முடித்து முல்லைத்தீவுக்கு வந்தார். அங்கு தகவல் தொழில்நுட்ப நிலையம் நடத்தி வந்தார். பின், உதயகலாவை திருமணம் செய்து கொண்டார். சிறிது காலத்துக்கு பின், இருவரும் புலிகள் இயக்கத்தோடு நெருக்கமாயினர். முதலில் தொழில்நுட்பப் பிரிவில் பொறுப்பு அளிக்கப்பட்டது; மாதம், 50,000 ரூபாய் சன்மானம் பெற்றனர். அடுத்த கட்டமாக, உளவு பிரிவில் பணியாற்றினர்.

கடந்த 2009ல் இலங்கை ராணுவத்தால் புலிகள் இயக்கம் அழிக்கப்பட்ட பின், தயாபரராஜ், உதயகலா, அவர்களின் மூன்று பிள்ளைகளான டியோரன், டிலினி, டில்கியா ஆகியோர், வவுனியாவில் இருந்தபடி, ‘எங்களுக்கு இலங்கை ராணுவம் மற்றும் உளவுத் துறை தலைவர்களுடன் தொடர்பு உள்ளது.’ராணுவத்தில் சிக்கியவர் புலிகள் இயக்கத்தினரை மீட்டு தருகிறோம்’ என்று கூறி, முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா மாவட்டங்களை சேர்ந்த பலருக்கு, வாக்குறுதி அளித்தனர்.அதற்காக, ஐந்து கோடி ரூபாய் பெற்றனர். ஆனால், சொன்னபடி எதுவும் செய்யவில்லை. பணம் கொடுத்து ஏமாந்தவர்கள், இலங்கை போலீசில் புகார் அளித்தனர். குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து, தயாபரராஜ், உதயகலாவை பிடிக்க முயன்றனர்.

இதையறிந்து, இருவரும் பிள்ளைகளுடன் தமிழகம் தப்பி வந்தனர். கடந்த 2014ல் கள்ளத்தோணியில் மண்டபம் வந்து இறங்கிய உதயகாலா குடும்பத்தினரை, கடலோர பாதுகாப்புப் படை போலீசார் பிடித்தனர்.பாஸ்போர்ட் இல்லாமல் வந்ததால், அவர்கள் மீது, ‘க்யூ’ பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில், ஒரு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.தண்டனை காலம் முடிந்ததும், அவர்களை இலங்கைக்கு அனுப்ப வேண்டும். தாமதமானால், திருச்சியில் உள்ள அரசு முகாமில் தங்க வைக்கலாம் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

அதன் அடிப்படையில், தயாபரராஜ் மட்டும், திருச்சி முகாமில் தங்க வைக்கப்பட்டார். அங்கு மகளிர் தங்க வசதி இல்லாததால், மண்டபம் முகாமில், தனி வீடு ஒதுக்கி கொடுத்து, உதயகலா, அவரது மகன், மகள்கள் தங்க வைக்கப்பட்டனர்.பின், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அனுமதி பெற்று, தயாபரராஜையும் தன்னுடன் அழைத்துக் கொண்டார். அவர்களுக்கு உணவு உள்ளிட்ட எல்லா ஏற்பாடுகளையும், முகாம் அதிகாரிகள் செய்து கொடுத்தனர்.

வெளியில் எங்கு சென்றாலும், உள்ளூர் போலீஸ் மற்றும், ‘க்யூ’ பிரிவு போலீசாருக்கு தகவல் செல்ல வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை, உதயகலா சிறிதும் மதிக்கவில்லை. திடீரென மண்டபம் முகாமில் இருந்து, அவர் தலைமறைவானார். சென்னை, அண்ணா நகரில் அவரை பிடித்த போலீசார், மீண்டும் மண்டபத்தில் தங்க வைத்தனர்.

இரு ஆண்டுகளுக்கு முன், உதயகலா உட்பட மொத்த குடும்பமும் தலைமறைவாகி விட்டது. தமிழக போலீசார் தத்தளித்த சூழலில்தான், அவர்கள் கள்ளத்தோணியில் மீண்டும், இலங்கைக்கு சென்ற தகவல் வெளி வந்துள்ளது.

இலங்கை சென்ற உதயகலா, ‘சர்வ மக்கள் கட்சி’ என்ற பெயரில் கட்சி துவக்கியுள்ளதாக, வீடியோ வெளியிட்டுள்ளார். இதை அறிந்த பின்பும், இலங்கை குற்றப்பிரிவு போலீசார், உதயகலா மீதான பழைய மோசடி வழக்குகளில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அதேபோல், உதயகலா இலங்கைக்கு தப்பி சென்ற தகவல் அறிந்த பின்பும், காணாமல் போய் விட்டதாக, மண்டம் முகாம் அதிகாரிகள் புகார் கொடுக்காதது ஏன் என்றும் தெரியவில்லை. தன்னை பிரபாகரன் மகள் துவாரகா என்று கூறி, உதயகலா வீடியோ வெளியிட்டதற்கு, இலங்கையில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பிரபாகரன் மகள் மற்றும் புலிகள் பெயரை சொல்லி ஏமாற்றும் உதயகலாவை யாரும் நம்ப வேண்டாம் இதுவே உண்மை.

உதயகலாவின் தில்லாலங்காடி தொடர்பாக மேலும் அறிய

Exit mobile version