Home மட்டக்களப்பு செய்திகள் என்னை பார்க்க கூடிய சிங்கள வீடு ஒன்றுக்கு செல்கிறேன் – கடிதம் எழுதிவிட்டு களுவாஞ்சிக்குடியில் 15...

என்னை பார்க்க கூடிய சிங்கள வீடு ஒன்றுக்கு செல்கிறேன் – கடிதம் எழுதிவிட்டு களுவாஞ்சிக்குடியில் 15 வயது சிறுமி மாயம்

என்னை பார்க்க கூடிய சிங்கள வீடு ஒன்றுக்கு செல்கிறேன் என கடிதம் எழுதிவிட்டு மட்டு களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள மகளூரில் வீட்டில் இருந்த ரமேஸ்குமார் கிரிஸ்டிகா என்ற 15 வயது சிறுமி ஒருவர் நேற்று (15) காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கிரிஸ்டிகா என்ற 15 வயது சிறுமி, வீட்டில் பெற்றோர் கஸ்டப்படுவதாகவும், தங்களை பார்க்க முடியாத நிலையில் இருப்பதாகவும், என்னைப் பார்க்க கூடிய சிங்கள வீடு ஒன்றுக்கு செல்வதாக நேற்று கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாக பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

குறித்த சிறுமியின் தந்தையர் மேசன் வேலை செய்துவருவதாகவும், மூத்த சகோதரன் திருமணம் முடித்து சென்றுள்ளதாகவும் சிறுமியும், சகோதரன் ஒருவர் உட்பட இருவர் பெற்றோருடன் வாழ்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், பெற்றோர் கஸ்டபட்டு வருவதாகவும் தந்தையாரின் தாயாரான அப்பம்மா மற்றும் உறவினர்கள் மாத்தளையில் வசித்து வருவதாகவும் கடந்த 2 வருடங்களாக சிறுமி அப்பம்மாவுடன் இருந்து வந்துள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாணையில் தெரியவந்துள்ளது.

காணாமல் போன சிறுமி தொடர்பாக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பெரும் குற்றத்தடுப்பு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

Exit mobile version