மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய சிவராத்திரி மட பரிபாலன சபையினரால் நடாத்தப்பட்ட பன்னிசை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்பு மற்றும் பரிசளிப்பு நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (8) காலை திருக்கேதீஸ்வரம் சிவராத்திரி மடத்தில் இடம் பெற்றது.
குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் கே.கனகேஸ்வரன் கலந்து கொண்டார்.
குறித்த போட்டியில் வட மாகாணத்தில் 5 மாவட்டங்களில் இருந்தும் போட்டியிட்ட போட்டியாளர்களில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
குறித்த நிகழ்வில் திருக்கேதீஸ்வர ஆலய பரிபாலன சபையினர்,பிரதேச செயலாளர் உட்பட அழைக்கப்பட்ட திணைக்கள தலைவர்களும் கலந்து கொண்டனர்.