Home Accident news பருத்தித்துறையில் சற்றுமுன் விபத்து , மருத்துவர் படுகாயம்

பருத்தித்துறையில் சற்றுமுன் விபத்து , மருத்துவர் படுகாயம்

யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை பேரூந்துசாலைக்கு அண்மித்த மருதடி பகுதியில் சற்றுமுன் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் படுகாயமடைந்த வைத்தியர் ஒருவர் பருத்தித்துறை ஆதாரவைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் .

சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

பருத்தித்துறை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த வைத்தியரும், எதிரே வந்த சிறிய ரக வாகனமும் எதிரெதிரே மோதியே குறித்த விபத்து இடம்பெற்றிருந்ததாகவும், பலத்த காயமடைந்த மருத்துவரை அருகிலிருந்தவர்கள் மீட்டு பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இது குறித்த விசாரணைகளை பருத்தித்துறை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

பருத்தித்துறையில் சற்றுமுன் விபத்து , மருத்துவர் படுகாயம்-oneindia news

Exit mobile version