Home இலங்கை செய்திகள் பழைய தகராறு முற்றியதில் 20 வயது இளைஞன் துடிதுடிக்க அடித்து கொலை..!

பழைய தகராறு முற்றியதில் 20 வயது இளைஞன் துடிதுடிக்க அடித்து கொலை..!

பழைய தகராறு ஒன்றை அடிப்படையாக கொண்டு ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் இளைஞன் ஒருவர் சிலரால் அடித்து கொல்லப்பட்டுள்ளார்.

ஹபராதுவ கஹவெனகம அம்பிட்டிய பிரதேசத்தில்  நேற்று (26) இச்சம்பவம் பதிவாகியுள்ளது.

குறித்த தரப்பினர் இளைஞனை தடி உள்ளிட்ட பொருட்களால் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மிஹிரிபன்ன, தல்பே பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞனே தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.

கொலையுடன் தொடர்புடைய ஆறு சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தல்பே, கஹவென்னகம பிரதேசத்தை சேர்ந்த 20 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹபராதுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version