குறிஞ்சாக்கேணி மாகாத் நகர் பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மற்றும் வறுமை நிலையிலுள்ள குடும்பங்களுக்கு திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக்யின் கோரிக்கைக்கமைவாக கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமானுடைய பரித்துரையின்கீழ் LIOC நிறுனத்தின் அனுசரனையில் நிவாரண உதவிகள் தௌபீக் எம்.பி யினால் சனிக்கிழமை (17) வழங்கிவைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் LIOC நினுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் தீபக் தாஸ், முன்னாள் கிண்ணியா பிரதேச சபைத் தவிசாளர்களான ஜவாதுல்லா, சனூஸ் மற்றும் LIOC நிறுவனத்தின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.