மேஷம்
aries-mesham
இன்று, எதிரிகள் மறைவர். எதிர்பார்த்த வரவுகள் வந்து ஏற்றம் தரும். உதவிக்கரம் நீட்டுவர் நண்பர்கள். மனதில் சொந்த வீடு வாங்கும் எண்ணம் உருவாகும். புகழும், புதுப் பெண்கள் சினேகமும் உண்டாகும்.
ரிஷபம்
taurus-rishibum
குழந்தைகள் உடல் நிலையில் அக்கறை தேவை. வெளியூர் பயணங்களில் கவனம் தேவை. அனைவருடனும் அன்பாக, சுமுகமாக, அமைதியாக நடந்தால் எதிர்ப்புகள் குறையும். தவிர்க்க முடியாத தன விரயங்கள் ஏற்படலாம்.
மிதுனம்
gemini-mithunum
தாயின் ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ள வேண்டிய நாள். தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த வரவுகள் எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது. படுத்தவுடன் தூக்கம் வராது.
கன்னி
virgo-kanni
வாக்கு வன்மையால் வருமானம் அதிகரிக்கும். வாகன யோகம் உண்டு. வியாபாரத்தில் கவனத்துடன் செயல்பட்டால் இழப்பைத் தவிர்க்கலாம். பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும்.
மகரம்
capricorn-magaram
பிறருக்கு உதவி புரிவதால் பெரு மகிழ்ச்சி அடைவீர்கள். எதிர்பார்த்த தனவரவு கைக்கு வந்து சேரும். தான தர்மங்கள் செய்வதில் ஆர்வம் ஏற்படும். கடின உழைப்பால் மாணவர்கள் நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெறுவர்.
கடகம்
cancer-kadagam
மனதில் தெம்பும், மன மகிழ்ச்சியும் அதிகரிக்கும். எல்லா வகையிலும் ஏற்றம் பெற கை கொடுப்பாள் மனைவி. குழந்தைகள் பால் பாசம் பொழிவார்கள். அரசு ஆதரவால் தொழில் வளர்ச்சியில் திருப்தி நிலவும்.
சிம்மம்
leo-simmam
தனலாபம், குடும்பத்தில் நிம்மதி, குடும்ப சுகம் ஆகியவை குறையும். மனைவியின் உடல் நிலையில் அக்கறை தேவை. புதிய தொழில் முதலீடுகளை ஒத்திப் போடுவது நல்லது. வார்த்தைகளை அளந்து பேசுவது நல்லது.
துலாம்
libra-thulam
வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை எதிர்பார்க்கலாம். முறையற்ற வழிகளில் பணம் வரலாம். உறவுகளிடையே மனக்கசப்பு உருவாகலாம். கோபத்தைக் குறைத்தால் நன்மை ஏற்படும்.
மீனம்
pisces-meenam
புதிய புதிய பயிற்சிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். தெளிவும் பிறக்கும். வாகன மற்றும் போஜன சுகங்கள் கூடி, அவருக்கு என்ன பெரிய ஆள் எனப் பெயர் பெறுவீர்கள். காதல் வலையில் விழ நேரலாம்.
தனுசு
sagittarius-thanusu
காரிய வெற்றி தரும் களிப்பான நாள். அரசு ஆதரவு இருக்கும். தன்னம்பிக்கை, தைரியம் மற்றும் தேகதிடம் அதிகரித்து, இந்திர போகம் ஏற்படும். பதவி மற்றும் அந்தஸ்து உயர்வு ஏற்படும் அருமையான நாள் இன்று.
விருச்சிகம்
scorpio-viruchagam
பெண்களால் இலாபம், அவர்கள் நட்பால் சுகம் ஏற்படும் இனிய நாள். உறவுகளின் ஆரோக்கியம் மேம்படும். பிரிந்தவர் சேரும் பொன்னான நாள். எல்லா வகையிலும் ஏற்றம் தரும் நாள்.
கும்பம்
aquarius-kumbam
எவருக்கும் தீமை செய்யும் எண்ணத்தை கைவிடுவது நல்லது. பெண்ணால் குடும்பத்தில் கலகம் உருவாகும். உயர் அதிகாரிகளிடம் பணிவுடன் நடந்தால் உயர்வு உண்டு.