Home ராசி பலன்கள் புன்னகை தரும் புதனில் உங்கள் ராசிபலன் எப்படி..!{6.3.2024}

புன்னகை தரும் புதனில் உங்கள் ராசிபலன் எப்படி..!{6.3.2024}

மேஷம்
aries-mesham
உங்கள் புகழ் ஓங்கும். தெய்வ நம்பிக்கையும், பாக்கிய விருத்தியும் ஏற்படும். கோவில் திருப்பணிகள் செய்ய மனம் விழையும். வாழ்க்கையில் வசந்த காலம் என நல்ல திருப்பங்கள் ஏற்படும்.

ரிஷபம்
taurus-rishibum
அதிகாரிகளிடம் பணிவோடு நடந்தால் அனுகூலம் பெறலாம். மனைவியின் கலகத்தால் உறவுகளிடையே உரசல்கள் ஏற்படலாம். பொருட்களை கவனமாக பாதுகாத்து இழப்பைத் தவிர்க்கலாம்.

மிதுனம்
gemini-mithunum
சாதுர்யப் பேச்சால் அனைவரையும் கவர்வீர்கள். பல வழிகளில் பணவரவு உண்டாகிப் பெரிய மனிதர் எனப் பெயர் எடுப்பீர்கள். அரசாங்கத்தால் ஆதாயங்கள் ஏற்படும்.

கன்னி
virgo-kanni
வீட்டில் திருட்டை தவிர்க்க எச்சரிக்கையோடு இருத்தல் அவசியம். தாயின் உடல் நிலையில் மிகுந்த கவனம் தேவை. சிலருக்குப் பணமுடை மற்றும் பண இழப்புகள் ஏற்படும்.

மகரம்
capricorn-magaram
பெண்கள் மூலம் கட்டுக்கடங்காத செலவுகள் ஏற்படும். வாகன விபத்தை தவிர்க்க வண்டியில் மெதுவாகச் செல்லவும். உறவுகளுடனான கருத்து வேறுபாடுகளை தவிர்க்க முயலவும்.

கடகம்
cancer-kadagam
திருப்திகரமான பணவரவுகள் மனமகிழ்ச்சி தரும். எதிர்பாராத வரவுகளும் ஏற்றம் தரும். புதிய ஆண், பெண் நண்பர்கள் அமைவர். அழகிய வீடு அமையும் வாய்ப்பு உருவாகும்.

சிம்மம்
leo-simmam
உங்கள் திறமைக் கேற்ற பாராட்டு கிடைக்காது. அக்கம் பக்கத்தினருடன் அனுசரணையாக நடப்பது நல்லது. வாகனங்களில் நிதானமாகச் சென்றால் தேவையற்ற விபத்துகளை தவிர்க்கலாம்.

துலாம்
libra-thulam
பழைய நிலுவைகள் கைக்கு கிடைத்தால், புதிய உற்சாகம் பிறக்கும். குழந்தைகள் மீது அன்பும், அவர்களின் முன்னேற்றத்தில் ஆர்வம் ஏற்படும். மனைவியின் பணிவிடைகள் மகிழ்ச்சி அளிக்கும்.

மீனம்
pisces-meenam
புதிய உத்தியோகமும், உத்வேகமும் ஏற்படும்.. பணியில் பணிவும், துணிவும் இருந்தால் முன்னேற்றம் ஏற்படும். பெண்களால் இலாபமும், போகமும் உண்டு.

தனுசு
sagittarius-thanusu
குடும்ப வாழ்க்கையில் அமைதியும், மகிழ்ச்சியும் நிலவும். படுக்கை சுகங்கள், நல் ஆடைகள், நண்பர்கள் அருகாமை, நல்ல அதிர்ஷ்டம் என எல்லா நலன்களும் தரும்.

விருச்சிகம்
scorpio-viruchagam
உங்கள் வழியில் தடைகள், சிக்கல்கள் ஏற்படலாம். மனைவியுடன் வாக்குவாதங்களை தவிர்க்கவும். வருமானக் குறைவு, கடன் தொல்லைகளும் மன அழுத்தத்தைத் தரும்.

கும்பம்
aquarius-kumbam
பிறருக்கு உதவி புரிவதால் பேரின்பம் அடைவீர்கள். பிரிந்த தம்பதிகள் மீண்டும் ஒன்று சேர்ந்து மகிழ்வர். பணவரவு மற்றும் பெண்களால் இலாபம் ஏற்பட மனம் மகிழும்.