அத்துரிகிரிய பிரதேசத்தில் அயல் வீட்டில் இருந்த லொறியில் செல்லப்பிராணியான பூனை சிக்கி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இரு குழுக்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.
லொறியொன்றில் வாள்களுடன் வந்த குழுவினர் வீடொன்றிற்கு சேதம் விளைவித்துள்ளதுடன் அயல் வீட்டில் இருந்த நபரும் இந்த தாக்குதலில் காயமடைந்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
நேற்றிரவு 8 மணியளவில் அதுருகிரிய – பக்மீகஹா வீதிப் பகுதியில் இவ்விரு குழுக்களுக்கிடையில் வாக்குவாதம் ஏற்பட்டு அது கைகலப்பாக மாறியது.
அயல் வீட்டுச் சிறு பிள்ளையொன்று செல்லப்பிராணியான பூனையை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றதாகவும், அப்போது அந்த பூனை அவர்களின் லொறியின் சில்லில் சிக்கி உயிரிழந்துள்ளதாகவும் வீட்டு உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், தனது செல்ல பிராணியான பூனை உயிரிழந்தமை தொடர்பில் அவர்களை திட்டியதாகவும், அதன் பிறகு சம்பந்தப்பட்ட குழுவினர் வந்து தாக்கியதாகவும் வீட்டின் உரிமையாளரான பெண் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் இரு தரப்பினரும் அதுருகிரிய பொலிஸில் செய்த முறைப்பாடுகளின் அடிப்படையில் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.