Home jaffna news போயா தினத்தில் வீட்டில் வைத்து சாரயம் விற்பனை செய்த யாழ்.நகர வாசி கைது

போயா தினத்தில் வீட்டில் வைத்து சாரயம் விற்பனை செய்த யாழ்.நகர வாசி கைது

பெளர்ணமி விடுமுறை தினத்தில் அரச சாரயத்தை விற்பனை செய்தார் என்ற குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 180 மில்லி மற்றும் 750 மில்லி மதுபானம் கொண்ட 102 போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இன்று முற்பகல் யாழ்ப்பாணம் மாநகர் மடத்தடிப்பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து 36 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் பரிசோதகர் தெ.மேனன் தலைமையிலான யாழ்ப்பாணம் மாவட்ட குற்ற விசாரணை பிரிவினரே இந்தக் கைது நடவடிக்கையை முன்னெடுத்தனர்