Home இலங்கை செய்திகள் மட்டக்களப்பில் கல்வி சமூகம் போராட்டம்..!{படங்கள்}

மட்டக்களப்பில் கல்வி சமூகம் போராட்டம்..!{படங்கள்}

கிழக்கு மாகாணத்தில் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் பின்தங்கிய பிரதேச மாணவர்கள் தற்போது தேசிய ரீதியில் சிறந்த பெறுபேறுகளை பெற்று வருகின்ற இவ்வேளையில் சிலர் அரசியல் சுயநலம் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்வி பணிமனைகளில் சேவை யாற்றும் அதிபர்கள் ஆசிரியர்கள் வளையக்கல்வி பணிமனையின் ஊழியர் களை இலக்கு வைத்து சமூக ஊடகங்களில் பிழையான கருத்துக்களை தெரிவித்து பொதுமக்களை குழப்புகின்ற செயற்பாட்டை கண்டித்து இன்று காலை மட்டக்களப்பு காந்தி பூங்காவில் மட்டக்களப்பு கல்வி சமூகம் கல்வி நலன்புரி அமைப்புகள் அதிபர்கள் ஆசிரியர்கள் தொழிற்சங்கங்கள் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

 மிகவும் அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில், ஆசிரியர் சேவைக்கும் தொழிற்சங்க சேவைக்கும் பொருத்தம் இல்லாத உதயரூபன் என்பவரை அனைத்து பதவியில் இருந்தும் நீக்குமாறும் தொழிற்சங்க அதிகார  அடாவடித்தனத்திற்கும் முடிவு கட்ட வேண்டிய இவர்கள் இங்கு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

அர்ப்பணிப்புடன் பணியாற்றும் ஆசிரியர் சமூகத்தை அதிபர்களை அவமானப்படுத்த வேண்டாம் என்ற கருப்பொருளுக்கு அமைய இந்த கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன் போது ஆசிரியர் தொழிற்சங்க உறுப்பினர்கள் அதிபர்கள் தங்களது கண்டன ஆர்ப்பாட்டம் பற்றிய கருத்துக்களை ஊடகங்களுக்கு தெரிவித்தனர்.

மட்டக்களப்பில் கல்வி சமூகம் போராட்டம்..!{படங்கள்}-oneindia news

Exit mobile version