Home இலங்கை செய்திகள் மட்டக்களப்பில் பாதுகாப்பற்ற புகையிரத கடவை ஊழியர்கள் தொடர் போராட்டம்..!{படங்கள்}

மட்டக்களப்பில் பாதுகாப்பற்ற புகையிரத கடவை ஊழியர்கள் தொடர் போராட்டம்..!{படங்கள்}

மட்டக்களப்பில் பாதுகாப்பற்ற புகையிரத கடவை ஊழியர்கள் தம்மை பொலிஸ் அடிமையில் இருந்து விடுவிக்குமாறும் வழங்கப்பட்டுவரும் மாதாந்த சம்பளமான 7 ஆயிரத்து 500 ரூபா சம்பளத்தை உயர்த்தி தருமாறும் பணியை நிரந்தரமாக்குமாறு கோரி இன்று திங்கட்கிழமை (26) இரண்டாவது நாளாக பணிபுறக்கணிப்பு மேற்கொண்டுவருவதுடன்  மட்டு புகையிரத நிலையத்தின் முன்னால்; தொடர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

கடந்த 2013 ம் ஆண்டு பொலிஸ் அதிகாரிகளால் பாதுகாப்பற்ற புகையிரத கடவை ஊழியர்களாக நியமிக்கப்பட்டு நாள் ஒன்றிற்கு 250 ரூபா வீதம் மாதாந்தம் 7 ஆயிரத்து 500 ரூபா கொடுக்கப்பட்டுவருகின்றது எனவே தற்போது குடும்ப செலவுக்கு மாதாந்தம் 35 ஆயிரம் ரூபா தேவைப்படுகின்றது எனவே சம்பளத்தை உயர்தியும் பணியை நிரந்தராமக்கியும் தருமாறு கோரி மட்டக்களப்பு மாவட்டத்தில்  கடமையாற்றிவரும் பாதுகாப்பற்ற புகையிரத கடவை ஊழியர்கள் ஞாயிற்றுக்கிழமை (25) பணியைபுறக்கணித்து ஆர்பாட்ட போராட்டத்தை ஆரம்பித்தனர்.

இந்த ஆர்பாட்டம் தொடர்ந்து இன்று இரண்டாவது நாளாக இடம்பெற்றுவருவகின்ற நிலையில் இதில் கலந்துகொண்ட ஊழியர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் எங்களை பொலிசார் அடிமைகளாக நடாத்துகின்றன் நாங்கள் கடந்த 10 வருடத்துக்கு மேலாக இந்த பாதுகாப்பற்ற கடவை ஊழியர்களாக கடமையாற்றி வருகின்றோம்

இதில் மாதம் 31 நாளும் வேலை செய்தால் 7 ஆயிரத்து 500 ரூபா ஒருநாள் லீவு எடுத்தல் சம்பளத்தில் 500 ரூபாவை வெட்டுவார்கள் தினமும் காலையில் இருற்து இரவு வரை கடமையில் இருக்கவேண்டும் அங்கு கடவை கேற்றுக்கள் கூட சீரானது இல்லை நாங்கள் அங்கு இருப்பதற்கு கூட சீரான கொட்டகையில்லை மழையிலும் வெய்யிலிலும் பல்வேறு அளெகரியங்கள் மத்தியில் வேலை செய்துவருகின்றோம்

இந்த நிலையில் தற்போதைய பொருளாதார நெருக்கடியினால் மாதாந்தம் குடும்பம் ஒன்றின் செலவுக்கு 35 ஆயிரம் ரூபா தேவையான நிலையில் 8 மணிநேர வேலைக்கு நாள் ஒன்றிற்கு 250 ரூபா 31 நாள்வேலை இந்த சம்பளத்துடன் எவ்வாறு வாழமுடியம் எனவே இந்த வேலையை விட்டு நாங்கள் விலகிசெல்வதாக இருந்தால் இந்த சம்பளத்திற்கு ஒருவரை தந்து விட்டு செல்லுமாறு பொலிசார் தெரிவிக்கின்றனர்.

எனவே வேலையை விட்டு போகவும் முடியாது சம்பளத்தை கூட்டியும் தராமல் பொலிசார் எங்களை அடிமைகளாக நடாத்துகின்றனர்.  அரசியல்வாதிகளிடம் முறையிட்டோம் அதற்கு கூட எதுவிதமான தீர்வும் இல்லை நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு மட்டு கருவப்பங்கேணி ரயில் தண்டவாளத்தில் ரயிலுடன் மோதி ஒருவர் உயிரிழந்தார் ஒருவரின் உயிர் வெறும் 250 ரூபாவா?  எனவே எங்களுக்கு தீர்வு தரும்வரை இந்த போராடம் தொடரும் என்றனர்.

மட்டக்களப்பில் பாதுகாப்பற்ற புகையிரத கடவை ஊழியர்கள் தொடர் போராட்டம்..!{படங்கள்}-oneindia news மட்டக்களப்பில் பாதுகாப்பற்ற புகையிரத கடவை ஊழியர்கள் தொடர் போராட்டம்..!{படங்கள்}-oneindia news

மட்டக்களப்பில் பாதுகாப்பற்ற புகையிரத கடவை ஊழியர்கள் தொடர் போராட்டம்..!{படங்கள்}-oneindia news மட்டக்களப்பில் பாதுகாப்பற்ற புகையிரத கடவை ஊழியர்கள் தொடர் போராட்டம்..!{படங்கள்}-oneindia news