மட்டக்களப்பில் ‘தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம் ‘ எனும் தொனிப் பொருளில் தூய அரசியலுக்காக விழிப்புணர்வு பதாகை காட்சிப்படுத்தல் இன்று செவ்வாய்க்கிழமை (12) மட்டு மாவட்ட செயலகத்தின் வளாகத்தில் மார்ச் 12 இயக்கத்தினர் ஆரம்பித்து வைத்தனர்.
தேசிய மட்ட மார்ச் 12 இயக்கமானது எதிர்வரும் காலங்களில் நடைபெறவுள்ள தேர்தல்களை கருத்திற் கொண்டு தூய அரசியலுக்காக அரசியல் ஆட்சியாளர்களை உருவாக்கும் நோக்குடன்
‘தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம் ‘ எனும் தொனிப் பொருளில் விழிப்புணர்வு பதாகையினை காட்சி படுத்தும் மாவட்டத்திற்கான நிகழ்வு இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலக வளாகத்தில் மார்ச் 12 இயக்கம் இணைப்பாளர் சபா.சிவயோகநாதன் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது
இதில் சமூக செயற்பாட்டாளர்கள் அரசசர்பற்ற நிறுவனங்கள் பரதிநிதகள் பெண்கள் அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டுடனர்.