மட்டக்களப்பு நகரிலுள்ள தனியார் பேரூந்து தரிப்பிடத்தின் அருகிலுள்ள வாவியில் உயிரிழந்த நிலையில் ஆண் ஒருவர் (29) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.
புதிய காத்தான்குடி 6 ம் பிரிவு ஏ.எல்.எஸ். மாவத்தையைச் சேர்ந்த 49 வயதுடையவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்
குறித்த நபர் சுனயீனம் காரணமாக நேற்று காலை வீட்டை விட்டு வெளியேறி மட்டு போதனா வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.
பின்னர் வீடு திரும்பிவராத நிலையில் உறவினர்கள் தேடியிருந்த வேளை, வாவியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்