Home Accident news மட்டக்களப்பு-கொழும்பு பிரதான வீதியில் கோர விபத்து-பெண் பலி..!

மட்டக்களப்பு-கொழும்பு பிரதான வீதியில் கோர விபத்து-பெண் பலி..!

மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியில் நாவலடி பிரதேசத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை இடம்பெற்ற விபத்தில் குடும்ப பெண் ஒருவர் உயிர் இழந்துள்ளதுடன் அவரது கணவர் பலத்த காயங்களுடன் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

ஓட்டமாவடி ஸஹ்றா பெண்கள் அரபுக்கல்லூரியில் கல்வி கற்கும் தனது மகளைப் பார்வையிட்டு விட்டு வெலிகந்த, குடாபொகுனயிலுள்ள தமது வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருக்கையில் கொழும்பு பிரதான வீதியில் நாவலடியில் வைத்து மோட்டார் சைக்கிலுக்கு குறுக்கே நாய் பாய்ந்தமையினால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

 

சம்பவ இடத்திற்கு விரைந்த அகீல் எமேர்ஜென்ஸி ஹெல்பிங் யுனிட் வாகனம் விபத்தில் காயமடைந்தவர்களை வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று அனுமதித்த வேலை குடும்பபெண் மரணமடைந்துள்ளார்.

 

குறித்த விபத்தில் இல 01, குடாபொகுன, வெலிகந்த எனும் முகவரியை சேந்த 53 வயதுடைய அப்துல் ஹமீத் ஜமீலா என்பவர் மரணமடைந்துள்ளதுடன் அவரது கணவரான 56 வயதுடைய அபூபக்கர் முஹம்மது இப்றாஹீம் என்பவர் சிகிச்சை பெற்று வருகின்றார்.

 

மரணமடைந்த பெண்னின் ஜனாஸாவை உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கான முயற்சிகளை அகீல் எமேர்ஜென்ஸி ஹெல்பிங் யுனிட்டின் பணிப்பாளர் ஏ.சீ.எம்.நியாஸ்தீன் ஹாஜியார், அல் கிம்மா நிறுவனத்தின் பணிப்பாளர் எம்.எஸ்.எம்.ஹாறூன் ஸஹ்வி ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர்.