மட்டு வாழைச்சேனையில் 5அரை கிராம் ஜஸ் போதை பொருளுடன் பிரபல வியாபாரி உட்பட 3 பேர் கைது மோட்டர்சைக்கிள் மீட்பு
மட்டக்களப்பு வாழைச்சேனையில் போதை வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பிரபல போதை வியாபாரி ஒருவர் உட்பட 3 பேரை இன்று புதன்;கிழமை (21) அதிகாலை வாழைச்சேனனை பிரதான வீதியில் வைத்து 5 அரை கிராம் 200 மில்லிகிராம் ஜஸ் போதை பொருளுடன் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் கைது செய்ததுடன் மோட்டர்சைக்கிள் ஒன்றை மீட்டு ஒப்படைத்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.
மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் டி.எஸ்.எஸ்.கே. தெலங்காவலகே தலைமையிலாக பொலிஸ் குழுவினர் சம்பவதினமான இன்று அதிகாலை 4 மணிக்கு வாழைச்சேனை பிரதான வீதியில் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
இதன் போது அங்கு போதை பொருளுக்கு அடிமையான இருவர் பிரபல வியாபாரியிடம் போதை பொருள் வாங்குவதற்கு காத்துக் கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கில் அங்கு சென்ற வியாபாரி வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது கண்காணிப்பில் மாறு வேடத்தில் இருந்த பொலிசார் அவர்களை சுற்றிவளைத்து மடக்கிபிடித்து கைது செய்தனர்
இதன் போது வியாபாரியிடம் இருந்து 4 கிராம் ஜஸ்போதை பொருளையும், ஏனைய இருவரிடமிருந்து ஒன்றரைக்கிராம் , மற்றும் 200 மில்லிக்கிராம் ஜஸ்போதை பொருள்களையும் மோட்டர்சைக்கிள் ஒன்றையும் மீட்டு தம்மிடம் ஓப்படைத்துள்ளதாகவும் இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.