Home இலங்கை செய்திகள் மணல் அகழ்வுக்கு சென்றவர்களை தடுத்து நிறுத்திய தலைமன்னார் மக்கள்..!{படங்கள்}

மணல் அகழ்வுக்கு சென்றவர்களை தடுத்து நிறுத்திய தலைமன்னார் மக்கள்..!{படங்கள்}

தலைமன்னார் இறங்கு துறை பகுதியில் நேற்று வியாழக்கிழமை(22) மாலை மணல் அகழ்வு பணியில் ஈடுபட வந்த நிலையில் அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.

தலைமன்னார் இறங்கு துறை,தலைமன்னார் ஊர் மனை,தலைமன்னார் ஸ்டேஷன் பகுதி மக்கள் ஒன்றிணைந்து எதிர்ப்பை தெரிவித்தனர்.

இந்த நிலையில் தலைமன்னார் பொலிஸாரும் சம்பவ இடத்திற்கு சென்றிருந்தனர்.

எவ்வித அனுமதியும் இன்றி மக்களுக்கு எவ்வித அறிவுறுத்தல்களும் வழங்கப்படாமல் மணல் அகழ்வு நடவடிக்கைகளுக்காக சகல ஆயத்தங்களுடனும் குறித்த குழுவினர் வருகை தந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

அப்பகுதிக்கு வருகை தந்த  மணல் பரிசோதனை குழுவினர் தாங்கள் ஒரு ஒப்பந்த நிறுவனம் என்றும் தமது   ஒப்பந்தத்தினை காண்பித்து உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மக்களின் எதிர்ப்பை   தொடர்ந்து குறித்த குழுவினர் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த  தலைமன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை  மேற்கொண்டு வருகின்றனர்.

மணல் அகழ்வுக்கு சென்றவர்களை தடுத்து நிறுத்திய தலைமன்னார் மக்கள்..!{படங்கள்}-oneindia news மணல் அகழ்வுக்கு சென்றவர்களை தடுத்து நிறுத்திய தலைமன்னார் மக்கள்..!{படங்கள்}-oneindia news

மணல் அகழ்வுக்கு சென்றவர்களை தடுத்து நிறுத்திய தலைமன்னார் மக்கள்..!{படங்கள்}-oneindia news மணல் அகழ்வுக்கு சென்றவர்களை தடுத்து நிறுத்திய தலைமன்னார் மக்கள்..!{படங்கள்}-oneindia news
Exit mobile version