Home இலங்கை செய்திகள் மது போதையில் நடமாடிய பௌத்த பிக்கு கைது

மது போதையில் நடமாடிய பௌத்த பிக்கு கைது

காலி பகுதியில் உள்ள பௌத்த பிக்கு ஒருவர் நல்லதண்ணி நகரில் மது போதையில் நடமாடிய நிலையில்  நேற்று மாலை நல்லதண்ணி பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட பௌத்த மதத்தைச் சேர்ந்த பிக்கு காலி பகுதியில் உள்ள பிரபல பௌத்த விகாரையைச் சேர்ந்தவர் எனவும் நேற்று மாலை சிவனடி பாத மலைக்கு தரிசனம் செய்ய வந்த வேலையில் இவர் அதிகளவில் போதையில் நடமாடியதை தொடர்ந்து நல்லதண்ணி பொலிஸார் அவரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று இன்று காலை விடுவித்து உள்ளதாக மேலும் தெரியவருகின்றது.

மதகுரு ஒருவர் புனித பூமியில் வந்து இவ்வாறு நடந்து கொண்டமை வேதனைக்கு உரியது என நல்லதண்ணி நகரில் உள்ள அனைத்து பௌத்த இந்து சமய மக்கள் தமது எதிர்ப்பையும் வருத்தத்தையும் தெரிவிக்கின்றனர்.

மது போதையில் நடமாடிய பௌத்த பிக்கு கைது-oneindia news

இதேவேளை, நுவரெலியா மாவட்டத்தின் அனைத்து மதத் தலைவர்களும் நல்லதண்ணி பொலிசாரும் மற்றும் நுவரெலியா மாவட்ட சர்வமத வட்டத்தின் இளைஞர் பிரதிநிதிகளும் இணைந்து, சமய நல்லிணக்கம் மற்றும் சமாதானத்திற்காக பொதுமக்களுக்கு கல்வி கற்பித்தல் மற்றும் சகவாழ்வு மற்றும் நல்லிணக்கம் குறித்த விழிப்புணர்வு பதாதைகளை மலையின் அடிவாரம் முதல் உச்சிவரை நாட்டினர் .

இன்று (20) ஸ்ரீ சிவனடி பாதமலை அடிவார வளாகத்தில் வைபவ ரீதியாக இச்சம்பவம் நடைபெற்றது.

இலங்கை தேசிய சமாதானப் பேரவையானது நுவரெலியா மாவட்ட சர்வமத வட்டம் மற்றும் கலாச்சார மற்றும் சுற்றாடல் கலாசாரத்துடன் இணைந்து இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியது.

இந்த நிகழ்வில் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் திருமதி இரேஷா மற்றும் இந்து, பௌத்த, கிறித்தவ சமய, மத குருமார்கள் கலந்து கொண்டனர்.

மஸ்கெலியா விசேட நிருபர்.செ.தி.பெருமாள்

Exit mobile version