இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய காரியாலயமானது 2024 ஆம் ஆண்டிற்கான சர்வதேச மகளிர் தினத்தை சிறப்பிக்கும் முகமாக “பெண்களுக்கான ஆதரவின் மூலம் பொருளாதார மாற்றம்”: “நெருக்கடிக்கு ஒரு பதிலளிப்பு.’ (“Economic Transformation through Support for Women”: ‘A Response to the Crisis.) இன்று யாழ்ப்பாணத்தில் தனியார் விடுதியில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் சமகால பொருளாதார நெருக்கடிக்குள் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பில் துறைசார் அதிகாரிகளின் கருத்துபரிமாறல்கள் இடம்பெற்றன.
குறிப்பாக பெண் தொழிற்படையினர் (Labour Force), புலம்பெயர் தொழிலாளர்களாகவுள்ள பெண்கள் (Migrant Workers), ஆடை தொழிற்சாலைகளில் கடமையாற்றும் பெண்கள் (Garnment Sectors) மற்றும் முறைசாரா Informal Sector) முன்னிலைப்படுத்தி துறைசார் கருத்துக்கள் இடம்பெற்றன.