Home இலங்கை செய்திகள் மன்னார் சிறுமியின் இறுதி யாத்திரை..!{படங்கள்}

மன்னார் சிறுமியின் இறுதி யாத்திரை..!{படங்கள்}

மன்னாரில் சடலமாக மீட்கப்பட்ட 10 வயதான சிறுமி, பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு, கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளது பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

தலைமன்னார் கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு காணாமல் போன அ.ஆன்கியான்சிதா என்ற சிறுமி, நேற்று (16) அதிகாலை 3.30மணியளவில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

அவரது சடலம் இன்று யாழ்ப்பாணம் போதன வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டுவரப்பட்ட சிறுமியுடன் இன்று காலை 10.30 மணியளவில் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டது.

பிரேத பரிசோதனை மேற்கொண்ட சட்ட வைத்திய அதிகாரி செல்லத்துரை பிரணவன் குறித்த சிறுமி பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

சிறுமியின் உடல் தற்போது அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைத்து பின்னர் நல்லடக்கம் செய்யப்படும் என தெரிவிக்கபடுகிறது.

அவரை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கிய சந்தேகநபரான தென்னந்தோட்ட பராமரிப்பாளர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றவாளிக்கு கடுமையான தண்டனை கிடைக்க மன்னார் மக்கள் மன்றாடுகிறார்கள்.

மன்னார் சிறுமியின் இறுதி யாத்திரை..!{படங்கள்}-oneindia news மன்னார் சிறுமியின் இறுதி யாத்திரை..!{படங்கள்}-oneindia news