Home இலங்கை செய்திகள் மலையகத்தில் தனியார் வகுப்புக்கு சென்ற மாணவ மாணவியருக்கு நேர்ந்த துயரம்..!

மலையகத்தில் தனியார் வகுப்புக்கு சென்ற மாணவ மாணவியருக்கு நேர்ந்த துயரம்..!

நல்லதண்ணி பொலிஸ் பிரிவில் உள்ள பொரஸ் பிரிவில் தனியார் வகுப்பு சென்ற மாணவ மாணவிகள் குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நல்லதண்ணி பொலிஸ் பிரிவில் உள்ள நல்லதண்ணி தமிழ் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் 13 வயது உடைய மாணவ மாணவிகள் இன்று மாலை 6 மணிக்கு தனியார் வகுப்புக்கு சென்று திரும்பும் வேளையில் குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவ்வாறு தனியார் வகுப்புக்கு சென்று திரும்பும் வேளையில் 3 ஆண் மாணவர்கள் 9 பெண் மாணவியர்கள் எனவும் அனைவரும் 13 வயது உடையவர்கள் என்று நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சாந்த வீரசேகர தெரிவித்தார்.

Exit mobile version