Home இலங்கை செய்திகள் மஸ்கெலியா கினிகத்தேன பிரதான வீதியில் பாரிய மரம் சரிந்ததால் போக்குவரத்து தடை..!{படங்கள்}

மஸ்கெலியா கினிகத்தேன பிரதான வீதியில் பாரிய மரம் சரிந்ததால் போக்குவரத்து தடை..!{படங்கள்}

மஸ்கெலியா கினிகத்தேன பிரதான வீதியில் நோட்டன் அட்லிஸ் பகுதியில் இன்று மதியம் பாரிய மரம் ஒன்று சாய்ந்ததால் பல மணி நேரம் போக்குவரத்து நடவடிக்கைகள் ஸ்தம்பிதம் அடைந்தது என நோட்டன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில் இன்று மதியம் இப் பகுதியில் வீசிய கடும் காற்றினால் நோட்டன் தியகல பிரதான வீதியில் பாரிய வாகை மரம் சரிந்ததால் சுமார் நான்கு மணித்தியாலம் போக்குவரத்து நடவடிக்கைகள் ஸ்தம்பிதம் அடைந்தது.

வீதி அபிவிருத்தி அதிகாரசபை உடன் நடவடிக்கை எடுத்து அந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.

அதனைத் தொடர்ந்து வாகன போக்குவரத்து நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டது.

நாளை முதல் விசேட விடுமுறை என்பதால் சிவனடி பாத மலைக்கு தரிசனம் செய்ய அதிக அளவில் யாத்திரிகர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர் அவ்வீதியூடாக என அவர் மேலும் தெரிவித்தார்.
மஸ்கெலியா கினிகத்தேன பிரதான வீதியில் பாரிய மரம் சரிந்ததால் போக்குவரத்து தடை..!{படங்கள்}-oneindia news

Exit mobile version