Home மட்டக்களப்பு செய்திகள் மாடுகளை காப்பாற்றச்சென்ற இளைஞனுக்கு எமனாக வந்த முதலை

மாடுகளை காப்பாற்றச்சென்ற இளைஞனுக்கு எமனாக வந்த முதலை

அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி கல்முனை பகுதியை இணைக்கின்ற கிட்டங்கி வாவி பகுதியில் மாடுகளை மேய்ப்பதற்காக கிட்டங்கி ஆற்றில் இறங்கிய இளைஞனை நேற்று முதலை இழுத்து சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

மாடுகள் கிட்டங்கி வாவியில் இறங்கி நிற்பதாக நண்பன் தெரிவித்ததற்கமைய குறித்த இளைஞன் மாடுகளை கரையேற்றுவதற்காக வாவியினுள் இறங்கிய நிலையில் முதலை இளைஞனை பிடித்து இழுத்துச் சென்றுள்ளது.

இவ்வாறு முதலை இழுத்துச் சென்று காணாமல் போனவர் சேனைக்குடியிருப்பு 1 பிரிவு 157 விக்னேஸ்வரன் வீதியை சேர்ந்த சுகிர் பிரதாஸ் (வயது-30) என்பவராவார்.

மாடுகளை காப்பாற்றச்சென்ற இளைஞனுக்கு எமனாக வந்த முதலை

காணாமல் போன இளைஞனை மீட்பதற்கு இன்று(24)பொதுமக்களுடன் கடற்படையினர் பொலிஸார் இணைந்து தேடுதலை மேற்கொண்ட நிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மேற்படி பகுதியில் முதலைகளின் பெருக்கம் அதிகரித்து காணப்படுகிறதுடன் முதலைகளின் பெருக்கம் சம்பந்தமாக உரிய இடங்களில் அறிவுறுத்துதல்கள் எச்சரிக்கை பலகைகள் உரிய இடங்களில் இதுவரையும் வைக்கப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை.

முதலை அபாயம் தெரியாமல் இப்பகுதியில் பயணிப்பதால் முதலையின் பிடிக்குள் அகப்படும் சாத்தியம் உள்ளது. இதை உரிய அதிகாரிகள் கவனத்தில் எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.

பாறுக் ஷிஹான்

Exit mobile version