Home Uncategorized மிரிஹானவில் சடலங்கள் மீட்பு.!

மிரிஹானவில் சடலங்கள் மீட்பு.!

மிரிஹான ஜுபிலி மாவத்தை பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து நேற்று (08) தம்பதியினரின் சடலங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

பொலிஸார் குறித்த வீட்டிற்கு சென்று சோதனை செய்தபோது, ​​வீட்டின் அறையில் கட்டிலில் சில நாட்களுக்கு முன் உயிரிழந்த ஆணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வீட்டின் சமையலறை தரையில் நிர்வாணமாக பெண்ணின் சடலம் இருந்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சில நாட்களாக குறித்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதாக அயலவர் ஒருவர் மிரிஹான பொலிஸாருக்கு வழங்கிய அறிவித்தலின் படி குறித்த வீடு சோதனையிடப்பட்டுள்ளது.

80 வயதுடைய ஆணும் 96 வயதான பெண்ணுமே உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.