Home இலங்கை செய்திகள் மீன் பிடிக்க சென்ற மீனவர் மாயம்..!

மீன் பிடிக்க சென்ற மீனவர் மாயம்..!

மீன் பிடிக்க சக மீனவர்களுடன் கடலுக்கு சென்ற மீனவர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பேருவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு காணாமல் போனவர் பலப்பிட்டி பிரதேசத்தை சேர்ந்த ரசிக டிலான் என்ற நபராவார்.

இவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (25) இரவு 7.55 மணியளவில் பேருவளை மீன்பிடி துறைமுகத்தில் மீன் பிடிப்பதற்காக மீன்பிடி படகில் 6 மீனவர்களுடன் சென்றிருந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த படகில் இருந்த ஏனைய 4 மீனவர்களும் மீன்பிடி படகு செலுத்தியவரும் காணாமல் போன மீனவரை தேடும் பணியில் ஈடுபட்டும் அவரை கண்டுபிடிக்க முடியாமல் போயுள்ளது.

மீன் பிடிக்க சென்ற மீனவர் மாயம்..! - Dinamani news - மீன் பிடிக்க, மீன் பிடிக்க சென்ற மீனவர்

இதனையடுத்து இந்த மீன்பிடி படகின் ஓட்டுநர் இது தொடர்பில் பேருவளை மீன்பிடி துறைமுகத்தின் பொறுப்பாளரிடம் தெரிவித்ததையடுத்து அவர் பேருவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.