பல வருட ஓய்வூதியம் மற்றும் முதியோர் கொடுப்பனவுகளை மொத்தமாகப் பெற்றுத் தருவதாக கூறி கந்தளாய் பிரதேசத்தில் கொள்ளை சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கந்தளாய் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பல பகுதிகளில் அரச உத்தியோகஸ்த்தர்கள் எனும் போர்வையில் கொள்ளை கும்பலொன்று வயோதிப் பெண்களை இலக்குவைத்துள்ளனர்.
கந்தளாய் பிரதேசத்தின் தெரிவு செய்யப்பட்ட சில வீடுகளுக்கு மோட்டார் சைக்கிளில் வருகை தருவதுடன் முதியோர் உதவித்தொகை பெறுவதற்கு தகுதியுடையவர்கள் என புத்தகம் ஒன்றும் காணப்பிக்கப்பட்டதாக பாதிக்கப்பட்டோர் தெரிவிக்கின்றனர்.
மொத்த தொகையினைப் பெற்றுக்கொள்வதற்கு முத்திரைத்தாள் கட்டணம் மற்றும் அரசு கட்டணமாக, 4,000 ரூபாவிற்கு மேல் செலுத்த வேண்டும் என குறித்த நபர் கோரியுள்ளார்.
மேலும் பணம் கொடுக்க முடியாவிட்டால் தங்க ஆபரணங்களை அடகு வைப்பதற்கு ஏற்பாடு செய்வதாகவும் பாதிக்கப்பட்ட பெண்கள் முறைப்பாடளத்துள்ளனர்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் கந்தளாய் பிரதேச செயலகம் மற்றும் பொலிஸாருக்கு அறிவிக்க பிரதேசவாசிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பொதுமக்கள் இவ்வாறான கொள்ளை சம்பவங்கள் தொடர்பில் விழிப்புணர்வுடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.