Home Uncategorized யாழில் அழுகிய நிலையில் ஆணின் சடலம் மீட்பு

யாழில் அழுகிய நிலையில் ஆணின் சடலம் மீட்பு

யாழ்ப்பாணம் றக்கா வீதி புதிய குடியேற்றம் திட்டம் பகுதியில் உள்ள பொதுக்கிணத்தில் இருந்து அழுகிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

குளிப்பதற்கு சென்ற பொழுது சடலம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதுடன் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் போலீசருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நபர் இரண்டு நாட்களுக்கு முன்னர் காணாமல் போய் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தலையில் காயம் ஒன்று காணப்படுவதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் ,அருளானந்தம் அமலதாஸன் 55 என போலீசார் தெரிவிக்கின்றனர்